ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரும்பபாளையம், A வளாகத்தில் 15.06.2024 அன்று காலை 11.00 மணியளவில் ” ஜம்புத்தீவு பிரகடனம்” நினைவு கூறல் நிகழ்ச்சி நடைபெற்றது..
பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின் படி மாணவ மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் , கல்லூரி முதல்வர் அரா.அனுஜா அம்மா அவர்கள் கலந்து கொண்டு மருது சகோதரர்கள் பற்றியும், நாட்டுக்காக பிரிட்டிஷ்காரர்களிடம் அவர்கள் போரிட்ட விதம் குறித்தும் மாணவர்களிடம் நினைவு கூர்ந்தார். பின்பு மருது சகோதரர்களின் திரு உருவ படங்களுக்கு மலர்களைத் தூவி வழிபட்டார். அதைத் தொடர்ந்து அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் மலர்களைத் தூவி வழிபட்டனர். மாணவர்கள் தங்களது பங்களிப்பை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.







